lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 4
4 இவ்வுலகம் ஒன்று. ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு -- இவை யனைத்தும் ஒன்றே. ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலையருவி, குழல், கோமேதகம் -- இவ் வனைத்தும் ஒன்றே. இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி, மின்னல், பருத்தி -- இஃதெல்லாம் ஒன்று. மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி -- இவை ஒருபொருள். வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் -- இவை ஒருபொருளின் பலதோற்றம். உள்ள...