lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 6-7
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 6 ஒளியே, நீ யார்? ஞாயிற்றின் மகளா? அன்று. நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம். ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம். ஞாயிற்றின் வடிவம் உடல். நீ உயிர். ஒளியே, நீ எப்போது தோன்றினாய்? நின்னை யாவர் படைத்தனர்? ஒளியே, நீ யார்? உனதியல்பு யாது? நீ அறிவின் மகள் போலும். அறிவுதான் தூங்கிக்கிடக்கும். தெளிவு நீ போலும். அறிவின் உடல் போலும். ஒளியே, நினக்கு வானவெளி எத்தனைநாட் பழக்கம்? உனக்கு அதனிடத்தே...