lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 8
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 8 ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு? வெம்மையேற ஒளி தோன்றும். வெம்மையைத் தொழுகின்றோம். ஒளியின் தாய். ஒளியின் முன்னுருவம். வெம்மையே, நீ தீ. தீ தான் வீரத்தெய்வம். தீ தான் ஞாயிறு தீயின் இயல்பே ஒளி. தீ எரிக. அதனிடத்தே நெய் பொழிகின்றோம். தீ எரிக. அதனிடத்தே தசை பொழிகின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக. அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ,...