lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 9
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 9 வானவெளி என்னும் பெண்ணை ஒளியென்னும் தேவன் மணநதிருக்கின்றான். அவர்களுடைய கூட்டம் இனிது. இதனைக் காற்றுத்தேவன் கண்டான். காற்று வலிமை யுடையவன். இவன் வானவெளியைக் கலக்க விரும்பினான். ஒளியை விரும்புவதுபோல வானவெளி இவனை விரும்பவில்லை. இவன் தனது பெருமையை ஊதிப் பறை யடிக்கின்றான். வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுபோல் கலந்தன. காற்றுத் தேவன் பொறாமை கொண்டான். அவன் அமைதியின்றி உழலுகிறான். அவன் சீறுகின்றான், புடைக்கின்றான், குமுறுகின்றான். ஓலமிடுகின்றான், சுழலுகின்றான், துடிக்கின்றான்;...