lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 11
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 11 புலவர்களே, அறிவுப்பொருள்களே, உயிர்களே, பூதங்களே, சக்திகளே, எல்லோரும் வருவீர். ஞாயிற்றைத் துதிப்போம், வாருங்கள். அவன் நமக்கெல்லாம் துணை. அவன் மழைதருகின்றான். மழை நன்று. மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம். ஞாயிறு வித்தைகாட்டுகின்றான். கடல்நீரைக் காற்றாக்கி மேலேகொண்டுபோகிறான். அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான். மழை இனிமையுறப் பெய்கின்றது. மழை பாடுகின்றது. அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி. வானத்திலிருந்து அமுதவயிரக்கோல்கள் விழுகின்றன. பூமிப்பெண் விடாய்தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள். வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும்...