இரண்டாங் கிளை: புகழ்

ஞாயிறு

12
நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்.
 வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஒளிக்குன்றே,
 அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத்
 தோன்றும் விழிகளின் நாயகமே,
 பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே,
 வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே,
 சிவனென்னும் வேடன் சக்தியென்னும் குறத்தியை உலக
 மென்னும் புனங்காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்
 போனவிளக்கே,
 கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும் தன் முகத்தை
 மூடிவைத்திருக்கும் ஒளியென்னும் திரையே,
 ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்.
 மழையும் நின் மகள், மண்ணும் நின் மகள்;
 காற்றும் கடலும் கனலும் நின் மக்கள்;
 வெளி நின் காதலி;
 இடியும் மின்னலும் நினது வேடிக்கை.
 நீ தேவர்களுக்குத் தலைவன்.
 நின்னைப் புகழ்கின்றோம்.
 தேவர்களெல்லாம் ஒன்றே.
 காண்பன வெல்லாம் அவருடல்.
 கருதுவன அவருயிர்.
 அவர்களுடைய தாய் அமுதம்.
 அமுதமே தெய்வம். அமுதமே மெய்யொளி.
 அஃது ஆத்மா.
 அதனைப் புகழ்கின்றோம்.
 அதன் வீடாகிய ஞாயிற்றைப் புகழ்கின்றோம்.
 ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று.

naam vemmaiyaip pugazhkindRoam.
vemmaith theyvamae, nYaayiRae, oLikkundRae,
amudhamaagiya uyirin ulagamaagiya udalilae meengaLaagath
thoandRum vizhigaLin naayagamae,
poomiyaagiya peNNin thandhdhaiyaagiya kaadhalae,
valimaiyin ootRae, oLi mazhaiyae, uyirkkadalae,
sivanennum vaedan sakthiyennum kuRathiyai ulaga
mennum punanggaakkachcholli vaithuvittup
poanaviLakkae,
kaNNanennum kaLvan aRivennum than mugathai
moodivaithirukkum oLiyennum thiraiyae,
nYaayiRae, ninnaip paravugindRoam.
mazhaiyum nin magaL, maNNum nin magaL;
kaatRum kadalum kanalum nin makkaL;
veLi nin kaadhali;
idiyum minnalum ninadhu vaedikkai.
nee thaevarkaLukkuth thalaivan.
ninnaip pugazhkindRoam.
thaevarkaLellaam ondRae.
kaaNpana vellaam avarudal.
karudhuvana avaruyir.
avarkaLudaiya thaay amudham.
amudhamae theyvam. amudhamae meyyoLi.
akhdhu aathmaa.
adhanaip pugazhkindRoam.
adhan veedaagiya nYaayitRaip pugazhkindRoam.
nYaayitRin pugazh paesudhal nandRu.

sdfsa

Comments

comments

like aa? no like aa? tell us please!