lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 12
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 12 நாம் வெம்மையைப் புகழ்கின்றோம். வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஒளிக்குன்றே, அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே, பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே, வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே, சிவனென்னும் வேடன் சக்தியென்னும் குறத்தியை உலக மென்னும் புனங்காக்கச்சொல்லி வைத்துவிட்டுப் போனவிளக்கே, கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளியென்னும் திரையே, ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம். மழையும் நின் மகள், மண்ணும் நின் மகள்;...