lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 4
சக்தி முதற் கிளை: இன்பம் 4 “மண்ணிலே வேலிபோடலாம். வானத்திலே வேலி போடலாமா?” என்றான் ராமகிருஷ்ண முனி. ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா? உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா? உயிரைக் கட்டு. உள்ளத்தைக் கட்டலாம். என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள். சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும். தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும் அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும். இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு ‘நான்’ என்று பெயர். இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள்....