[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 1-2

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 1 ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது? வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது? மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது? உயிர் எவன் தருகிறான்? புகழ் எவன் தருகின்றான்? புகழ் எவனுக்குரியது? அறிவு எதுபோல் சுடரும்? அறிவுத் தெய்வத்தின் கோயில் எது? ஞாயிறு. அது நன்று. oLi tharuvadhu yaadhu? theeraadha iLamaiyudaiyadhu yaadhu? veyyavan yaavan? inpam evanudaiyadhu? mazhai evan tharugindRaan? kaN evanudaiyadhu? uyir evan […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 6-7

6 தெய்வங்களை வாழ்த்துகின்றோம். தெய்வங்கள் இன்ப மெய்துக. அவை வாழ்க. அவை வெல்க. தெய்வங்களே! என்றும் விளங்குவீர், என்றும் இன்பமெய்துவீர். என்றும் வாழ்வீர், என்றும் அருள்புரிவீர். எவற்றையும் காப்பீர். உமக்கு நன்று. தெய்வங்களே! எம்மை உண்பீர், எமக்கு உணவாவீர். உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர். உமக்கு நன்று. தெய்வங்களே! காத்தல் இனிது, காக்கப்படுதலும் இனிது. அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று. உண்பது நன்று, உண்ணப்படுதலும் நன்று. சுவை நன்று, உயிர் நன்று, நன்று, நன்று. theyvangaLai vaazhthugindRoam. […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 5

Vision Branch One: Happiness 5 எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய்தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. ‘தான்’ வாழ்க. அமுதம் எப்போதும் இன்பமாகுக. Let all lives achieve happiness. Let all forms be cured of diseases. Realise that all sense are one. Let the ‘self’ live. Let the elixir be happiness forever. ellaa uyirum inpameydhuga. ellaa udalum noaydheerka. ellaa uNarvum […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 4

4 இவ்வுலகம் ஒன்று. ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு — இவை யனைத்தும் ஒன்றே. ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலையருவி, குழல், கோமேதகம் — இவ் வனைத்தும் ஒன்றே. இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி, மின்னல், பருத்தி — இஃதெல்லாம் ஒன்று. மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி — இவை ஒருபொருள். வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் — இவை ஒருபொருளின் பலதோற்றம். உள்ள […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 2 & 3

2 உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவையுடையது. மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். உணர்வே அமுதம். உணர்வு தெய்வம். udal nandRu. pulangaL migavum iniyana. uyir suvaiyudaiyadhu. manam thaen. aRivu thaen. uNarvu amudham. uNarvae amudham. uNarvu theyvam. The body is good. The senses are sweet. The soul has taste. Heart is honey. Knowledge is honey. Feeling is […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Happiness Part 1

The beginnning of a new section in the Bharathi’s Vasana kavidhai series. This series is called Kaatchi (vision). Get ready for magic! காட்சி முதற் கிளை: இன்பம் 1 இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை யுடைத்து; காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது […]

Read More

[Bharathi – Vasana Kavithai] Wind – Part 15

15 உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம். தோன்றும் பொருள்களின் தோற்றநெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத யிர்த்தொகைகள்- இவையெல்லாம் நினது விளக்கம். மண்ணிலும், நீரிலும், […]

Read More

[Bharathi – Vasana Kavithai] Wind – Part 13-14

13 அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம். இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா? ஆம். கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே! அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது. வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது. காற்றாடி! உயிருள்ளது. நீராவி-வண்டி உயிருள்ளது! பெரிய […]

Read More

[Bharathi – Vasana Kavithai] Wind – Part 12

காக்கை பறந்து செல்லுகிறது; காற்றின் அலைகளின்மீது நீந்திக்கொண்டு போகிறது. அலைகள்போலிருந்து, மேலே காக்கை நீந்திச்செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று. அன்று, அஃதன்று காற்று; அது காற்றின் இடம். வாயு நிலயம். கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத் தூள்களே (காற்றடிக்கும் போது) நம்மீது வந்து மோதுகின்றன. அத்தூள்களைக் காற்றென்பது உலகவழக்கு. அவை வாயு வல்ல, வாயு ஏறிவரும் தேர். பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது. நீரிலே சூடேற்றினால் ‘வாயு’ வாகிவிடுகிறது. தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது. […]

Read More

[Bharathi – Vasana Kavithai] Wind – Part 10-11

Wind – Part 10 & 11 10 மழை பெய்கிறது, ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான். ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி யிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். ‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது ஈசனுடைய […]

Read More