lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 10
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 10 ஞாயிறே, நின்முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளிபெறுகின்றது. பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்த்யூன் முதலிய பலநூறு வீடுகள் -- இவை எல்லாம் நின்கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகை செய்கின்றன. தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவதுபோல, இவை யெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன வென்பர்; இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான். இவை ஒளிகுன்றிப் போயின; ஒளியிழந்தனவல்ல, குறைந்த ஒளியுடையன. ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை....