lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 7
பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்.குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசைபுரியாது; உள்ளம் குழலிலே ஒட்டாது.உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சுக் குழலிலே ஒட்டும்குழல் பாடும்.இஃது சக்தியின் லீலை.அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது குழலின்தொளையிலே கேட்கிறது.பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலேஇசையுண்டாக்குதல் -- சக்தி.தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன.பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும்யார் சுருதிசேர்த்துவிட்டது? சக்தி.“ஜரிகை வேணும்; ஜரிகை!” என்றொருவன் கத்திக்கொண்டுபோகிறான், அதே சுருதியில்.ஆ! பொருள்...