lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 8
பராசக்தியைப் பாடுகின்றோம். இவள் எப்படி உண்டாயினாள்? அதுதான் தெரியவில்லை. இவள் தானேபிறந்த தாய்; ‘தான்’ என்ற பரம்பொருளினிடத்தே. இவள் எதிலிருந்து தோன்றினாள்? ‘தான்’ என்ற பரம் பொருளிலிருந்து எப்படித் தோன்றினாள்? தெரியாது. படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது; அறிவுக்கும் தெரியாது. சாவு நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்குத் தெரியாது. வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியும். வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்; இதன் பயன் இன்பமெய்தல். உள்ளம் தெளிந்திருக்க; உயிர் வேகமும் சூடும் உடையதாக; உடல் அமைதியும்...