6 பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். “இனிய இசை சோகமுடையது” என்பது கேட்டுள்ளோம். ஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனிய தாயினும் சோகரசந் தவிர்ந்தது. இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பதுபோலிருக்கின்றது. ஒரு நாவலன் பொருள்நிறைந்த சிறிய சிறிய வாக்கியங் களை அடுக்கிக்கொண்டுபோவது போலிருக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்? “தானதந்தத் தானதந்தத் தா-தனத் தானதந்தன தானதந்தன தா — தந்தனத்தன தந்தனத்தன தா.” அவ்விதமாகப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக்கொண்டுபோகிறான். இதற்குப் பொருளென்ன? ஒரு […]
