[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 13

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 13 மழை பெய்கிறது. காற்றடிக்கின்றது. இடி குமுறுகின்றது. மின்னல் வெட்டுகின்றது. புலவர்களே, மின்னலைப் பாடுவோம், வாருங்கள். மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை — ஒளித் தெய்வத்தின் ஒரு தோற்றம். அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர். மின்னலைத் தொழுகின்றோம். அது நம்மறிவை ஒளியுறச்செய்க. மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன. மின் சக்தி இல்லாத இடமில்லை. எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே. கருங்கல்லிலே, வெண்மணலிலே, பச்சை இலையிலே, செம்மலரிலே, நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே — […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 12

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 12 நாம் வெம்மையைப் புகழ்கின்றோம். வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஒளிக்குன்றே, அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே, பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே, வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே, சிவனென்னும் வேடன் சக்தியென்னும் குறத்தியை உலக மென்னும் புனங்காக்கச்சொல்லி வைத்துவிட்டுப் போனவிளக்கே, கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளியென்னும் திரையே, ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம். மழையும் நின் மகள், மண்ணும் நின் மகள்; […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 11

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 11 புலவர்களே, அறிவுப்பொருள்களே, உயிர்களே, பூதங்களே, சக்திகளே, எல்லோரும் வருவீர். ஞாயிற்றைத் துதிப்போம், வாருங்கள். அவன் நமக்கெல்லாம் துணை. அவன் மழைதருகின்றான். மழை நன்று. மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம். ஞாயிறு வித்தைகாட்டுகின்றான். கடல்நீரைக் காற்றாக்கி மேலேகொண்டுபோகிறான். அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான். மழை இனிமையுறப் பெய்கின்றது. மழை பாடுகின்றது. அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி. வானத்திலிருந்து அமுதவயிரக்கோல்கள் விழுகின்றன. பூமிப்பெண் விடாய்தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள். வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 10

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 10 ஞாயிறே, நின்முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளிபெறுகின்றது. பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்த்யூன் முதலிய பலநூறு வீடுகள் — இவை எல்லாம் நின்கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகை செய்கின்றன. தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவதுபோல, இவை யெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன வென்பர்; இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான். இவை ஒளிகுன்றிப் போயின; ஒளியிழந்தனவல்ல, குறைந்த ஒளியுடையன. ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை. […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 9

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 9 வானவெளி என்னும் பெண்ணை ஒளியென்னும் தேவன் மணநதிருக்கின்றான். அவர்களுடைய கூட்டம் இனிது. இதனைக் காற்றுத்தேவன் கண்டான். காற்று வலிமை யுடையவன். இவன் வானவெளியைக் கலக்க விரும்பினான். ஒளியை விரும்புவதுபோல வானவெளி இவனை விரும்பவில்லை. இவன் தனது பெருமையை ஊதிப் பறை யடிக்கின்றான். வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுபோல் கலந்தன. காற்றுத் தேவன் பொறாமை கொண்டான். அவன் அமைதியின்றி உழலுகிறான். அவன் சீறுகின்றான், புடைக்கின்றான், குமுறுகின்றான். ஓலமிடுகின்றான், சுழலுகின்றான், துடிக்கின்றான்; […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 8

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 8 ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு? வெம்மையேற ஒளி தோன்றும். வெம்மையைத் தொழுகின்றோம். ஒளியின் தாய். ஒளியின் முன்னுருவம். வெம்மையே, நீ தீ. தீ தான் வீரத்தெய்வம். தீ தான் ஞாயிறு தீயின் இயல்பே ஒளி. தீ எரிக. அதனிடத்தே நெய் பொழிகின்றோம். தீ எரிக. அதனிடத்தே தசை பொழிகின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக. அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ, […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 6-7

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 6 ஒளியே, நீ யார்? ஞாயிற்றின் மகளா? அன்று. நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம். ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம். ஞாயிற்றின் வடிவம் உடல். நீ உயிர். ஒளியே, நீ எப்போது தோன்றினாய்? நின்னை யாவர் படைத்தனர்? ஒளியே, நீ யார்? உனதியல்பு யாது? நீ அறிவின் மகள் போலும். அறிவுதான் தூங்கிக்கிடக்கும். தெளிவு நீ போலும். அறிவின் உடல் போலும். ஒளியே, நினக்கு வானவெளி எத்தனைநாட் பழக்கம்? உனக்கு அதனிடத்தே […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 4-5

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 4 நீ சுடுகின்றாய், நீ வருத்தந் தருகின்றாய். நீ விடாய் தருகின்றாய், சோர்வு தருகின்றாய், பசி தருகின்றாய். இவை இனியன. நீ கடல் நீரை வற்றடிக்கிறாய், இனிய மழை தருகின்றாய். வானவெளியிலே விளக்கேற்றுகிறாய். இருளைத் தின்று விடுகின்றாய். நீ வாழ்க. You burn, You cause sadness. You give pain, You give tiredness. You give hunger. These all are sweet. You evaporate the seawater, […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 3

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 3 வைகறையின் செம்மை இனிது. மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க. உஷையை நாங்கள் தொழுகின்றோம். அவள் திரு. அவள் விழிப்புத் தருகின்றாள், தெளிவு தருகின்றாள், உயிர் தருகின்றாள், ஊக்கந் தருகின்றாள், அழகு தருகின்றாள், கவிதை தருகின்றாள். அவள் வாழ்க. அவள் தேன். சித்த வண்டு அவளை விரும்புகின்றது. அவள் அமுதம். அவள் இறப்ப தில்லை. வலிமையுடன் கலக்கின்றாள். வலிமைதான் அழகுடன் கலக்கும். இனிமை மிகவும் பெரிது. வட மேருவிலே பலவாகத் […]

Read More

[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 1-2

இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 1 ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது? வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது? மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது? உயிர் எவன் தருகிறான்? புகழ் எவன் தருகின்றான்? புகழ் எவனுக்குரியது? அறிவு எதுபோல் சுடரும்? அறிவுத் தெய்வத்தின் கோயில் எது? ஞாயிறு. அது நன்று. oLi tharuvadhu yaadhu? theeraadha iLamaiyudaiyadhu yaadhu? veyyavan yaavan? inpam evanudaiyadhu? mazhai evan tharugindRaan? kaN evanudaiyadhu? uyir evan […]

Read More