[Parashakthi] Sivaji Ganesan Court scene monologue
The most famous scene from #Sivaji’s first movie and the most remembered and coveted words of the Kalaingar. The power of words has been perfectly delivered by Sivaji and that has been a very important factor for the success of this scene and movie.
The whole story of the movie is summarised within five minutes very aptly.
Movie: Parasakthi
Script: Mu. Karunanidhi
Year: 1952
நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது! புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது! ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல! வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல! வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படக்கூடிய ஒரு ஜீவன் தான் நான்!
needhimanRam visithiram niRaindha
pala vazhakkugaLai chandhithirukkiRadhu!
pudhumaiyaana manidhargaLai kaNdirukkiRadhu!
aanaal indha vazhakku visithiramum alla!
vazhakkaadum naanum pudhumaiyaana manidhan alla!
vaazhkkaip paadhaiyilae charva chaadhaaraNamaaga
thenbadakkoodiya oru jeevan thaan naan!
The court has met so many strange cases!
Has seen many new people!
Yet, this case is neither strange!
Nor, me, the defendant is new!
In the course of life, I am a very commonly seen being!
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன், பூசாரியைத் தாக்கினேன், குற்றம் சாட்டப்ட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்! நீங்கள் எதிர்ப்பார்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேனென்று, இல்லை! நிச்சயமாக இல்லை!!
koavililae kuzhappam viLaivithaen,
poosaariyaith thaakkinaen,
kutRam chaattapttirukkiRaen ippadiyellaam!
neengaL edhirppaarbeergaL,
naan idhaiyellaam maRukkap poagiRaenenRu,
illai! nichayamaaga illai!!
I caused chaos in temple,
Attacked the priests,
I was accused, as such!
You would expect,
That I would deny them all,
No! Definitely Not!
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன், கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்க கூடாதென்பதற்காக! பூசாரியைத் தாக்கினேன், அவன் பக்தன் என்பதற்காக அல்ல, பக்தி பகல் வேஷமாய் ஆகிவிட்டதை கண்டிப்பதற்காக!
koavililae kuzhappam viLaivithaen,
koavil koodaadhu enbadhaRkaaga alla,
koavil kodiyavarin koodaaramaay irukka koodaadhenbadhaRkaaga!
poosaariyaith thaakkinaen,
avan pakthan enbadhaRkaaga alla,
pakthi pagal vaeShamaay aagivittadhai kaNdippadhaRkaaga!
I caused chaos in temple,
Not for protesting against temple,
For temples not to become as the tent of horrific!
I attacked the priest,
Not for he is a devotee,
For oppressing Devotion from becoming a deception!
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்..
unakkaen ivvaLavu akkaRai,
ulagathil yaarukkum illaadha akkaRai
enRu kaetpeergaL..
You would ask,
Why do you care about?
When none other in the world cares for?
நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன், சுயநலம் என்பீர்கள்! என் சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது! ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப் போல! என்னைக் குற்றவாளி என்கிறார்களே!
naanae paadhikkappattaen,
naeradiyaaga paadhikkappattaen,
chuyanalam enbeergaL!
en chuyanalathilae podhu nalamum kalandhirukkiRadhu!
aagaarathiRkaaga azhukkai chaappittu
thadaagathai chuthappaduthugiRadhae meen, adhaip poala!
ennaik kutRavaaLi engiRaargaLae!
I was affected,
Directly affected,
You say, Selfishness!
My selfishness has public concern in it!
Like the fish, that consumes dirt for its hunger,
And still cleanup the pond!
You name me, culprit!
இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே, கொஞ்ச தூரம் பின் நோக்கி நடந்து பார்த்தால், அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும்! பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன! தென்றலை தீண்டியதில்லை நான், தீயை தாண்டியிருக்கிறேன்!
indha kutRavaaLiyin vaazhkkai paadhaiyilae,
konja thooram pin noakki nadandhu paarthaal,
avan kadandhu vandhuLLa kaattaaRugaL
evvaLavu enRu kaNakkup paarkka mudiyum!
paattolikkum kuyilgaL illai en paadhaiyil,
padamedukkum paambugaL neLindhirukkinRana!
thenRalai theeNdiyadhillai naan,
theeyai thaaNdiyirukkiRaen!
If you look back and look into
the course of life of this culprit,
You could count the numerous Torrents
that he has crossed over on his path!
In my path, there were no singing koels,
But there were slithering snakes!
I haven’t caressed the breeze,
I have jumped over fire!
கேளுங்கள் என் கதையை! தீர்ப்பெழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்!
kaeLungaL en kadhaiyai!
theerppezhudhuvadhaRku mun thayavu cheydhu kaeLungaL!
Listen to my story!
Before writing my judgement, please listen!
தமிழ்நாட்டிலே, இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலை எழுத்திற்கு நான் விதி விலக்கா? ரங்கூன்! என் உயிரை வளர்த்தது! உயர்ந்தவன் ஆக்கியது! திருமணக் கோலத்திலே இருக்கும் என் தங்கையைக் காண வந்தேன்!
thamizhnaattilae, indha thiruvidathilae piRandhavan naan,
piRakka oru naadu, pizhaikka oru naadu,
thamizhnaattin thalai ezhuthiRku naan vidhi vilakkaa?
rangoon! en uyirai vaLarthadhu!
uyarndhavan aakkiyadhu!
thirumaNak koalathilae irukkum
en thangaiyaik kaaNa vandhaen!
In Tamilnadu, in this holy place, was I born,
A country to be born, Another country to strive,
Am I an exception to this fate of Tamilnadu?
Rangoon! It nurtured my soul!
Made me a great man!
I came back to see my sister,
In her wedding looks!
மோசடி வழக்கிலே ஈடுபட்டு, குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன்னால் நிற்கிறாளே, இதோ இந்த ஜாலக்காரி ஜாலி, இவள் வலையிலே வீழ்ந்தவர்களில் நானும் ஒருவன்!
moasadi vazhakkilae eedubattu, kutRavaaLik kooNdilae ungaL munnaal niRkiRaaLae, idhoa indha jaalakkaari jaali, ivaL valaiyilae veezhndhavargaLil naanum oruvan! Standing before you, Involved in fraudulence case, In the accused cage, Here, this mischievous Jolly, I am one of those who fell for her traps!
பணப்பெட்டியைப் பறிக்கொடுத்தேன், பசியால் திரிந்தேன், மெலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்!
paNappettiyaip paRikkoduthaen,
pasiyaal thirindhaen, melindhaen,
kadaisiyil paithiyamaaga maaRinaen!
I lost my money purse,
Wandered in hunger, lost weight,
At last, has become insane!
காண வந்த தங்கையைக் கண்டேன், கண்ணற்ற ஓவியமாக, ஆம், கைம்பெண்ணாக! தங்கையின் பெயரோ கல்யாணி, மங்களமான பெயர், ஆனால் கழுத்திலோ மாங்கல்யம் இல்லை!
kaaNa vandha thangaiyaik kaNdaen,
kaNNatRa oaviyamaaga,
aam, kaimbeNNaaga!
thangaiyin peyaroa kalyaaNi,
mangaLamaana peyar,
aanaal kazhuthiloa maangalyam illai!
I saw my sister, whom I came to see,
Like a portrait without eyes,
Yes, I saw her as a Widow!
My sister’s name was Kalyani,
An auspicious name,
Yet, there is no Mangalyam in her neck!
செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது! கையிலே பிள்ளை, கண்ணிலே நீர், கல்யாணி அலைந்தாள், கல்யாணிக்காக நான் அலைந்தேன்!
chezhithu vaazhndha kudumbam cheerazhindhuvittadhu!
kaiyilae piLLai, kaNNilae neer,
kalyaaNi alaindhaaL,
kalyaaNikkaaga naan alaindhaen!
Prospered family has fell apart!
Baby in hand, Tears in eyes,
Kalyani wandered,
For Kalyani, I wandered!
கல்யாணிக்கு கருணைக் காட்டினார்கள் பலர், அவர்களிலே காளையர் சிலர், கைம்மாறாக அவள் காதலைக் கேட்டனர்! கொலை வழக்கிலே சம்பந்தப்பட்டு கைதியாக நிற்கிறானே, இதோ இந்த கொடியவன் வேணு, இவன் பகட்டால் மயக்க முயன்றான் என் தங்கையை! நான் தடுத்திராவிட்டால் என் தங்கை அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்!
kalyaaNikku karuNaik kaattinaargaL palar,
avargaLilae kaaLaiyar chilar,
kaimmaaRaaga avaL kaadhalaik kaettanar!
kolai vazhakkilae chambandhappattu
kaidhiyaaga niRkiRaanae,
idhoa indha kodiyavan vaeNu,
ivan pagattaal mayakka muyanRaan en thangaiyai!
naan thaduthiraavittaal en thangai
appoadhae thaRkolai cheydhu koNdiruppaaL!
Many showed kindness towards Kalyani,
Amidst them, few youngsters,
Asked for her love in return!
Involved in murder case,
As accused, stands here,
This scoundrel, Venu,
He tried to woo my sister with his posh!
If I hadn’t stopped, my sister, by then,
would have committed suicide!
கடவுள் பக்தர்களும் கல்யாணியை காப்பாற்ற வந்தார்கள், பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டு! அவர்களில் தலைமை ஆனவன், இதோ, இந்த பூசாரி! கல்யாணியின் கற்பைக் காணிக்கையாக கேட்டிருக்கிறான் பராசக்தியின் பெயரால்! உலக மாதாவின் பெயரால்! கல்யாணி உலகத்தில் புழுவாக துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள், அவளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது இந்த பூசாரி தான்!
kadavuL pakthargaLum kalyaaNiyai kaappaatRa vandhaargaL,
piradhi upagaaramaaga avaL kadaikkaN paarvaiyaik kaettu!
avargaLil thalaimai aanavan,
idhoa, indha poosaari!
kalyaaNiyin kaRpaik
kaaNikkaiyaaga kaettirukkiRaan
paraasakthiyin peyaraal!
ulaga maadhaavin peyaraal!
kalyaaNi ulagathil puzhuvaaga thudithabadiyaavadhu
uyiroadu irundhiruppaaL,
avaLai thaRkolai cheydhu koLLa thooNdiyadhu
indha poosaari thaan!
Devotees too came forward to protect Kalyani,
Asking a glance from her, as token of gratitude!
Of them the chieftain is,
Here, this priest!
He has asked for her chastity
As offering,
In the name of Parasakthi!
In the name of Mother of World!
Kalyani would have lived, in this world,
At least as a wriggling worm!
This priest is the one, who pushed her into
Committing Suicide!
தன் குழந்தை இந்த இரக்கமற்ற உலகத்திலே விட்டு செல்ல அவள் விரும்பவில்லை! ஆதரவற்ற தன் குழந்தை துடித்து சாவதை அவள் விரும்பவில்லை! அவளே கொன்று விட்டாள்! விருப்பமானவர்களை கொல்வது விந்தையல்ல! உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி, ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்து கொண்டிருந்த கன்றுக்குட்டியைக் கொன்று விட சொல்லியிருக்கிறார், அது கஷ்டமுறுவதை காண சகிக்காமல்! அதே முறையைத் தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி! இது எப்படி குற்றமாகும்?
than kuzhandhai indha irakkamatRa ulagathilae
vittu chella avaL virumbavillai!
aadharavatRa than kuzhandhai thudithu chaavadhai
avaL virumbavillai!
avaLae konRu vittaaL!
viruppamaanavargaLai kolvadhu vindhaiyalla!
ulaga uthamar kaandhi, aHimsaa moorthi, jeevagaaruNya cheelar,
avarae noayaal thudithu koNdirundha
kanRukkuttiyaik konRu vida cholliyirukkiRaar,
adhu kashdamuRuvadhai kaaNa chagikkaamal!
adhae muRaiyaith thaan kaiyaaNdirukkiRaaL kalyaaNi!
idhu eppadi kutRamaagum?
She didn’t like to leave behind her child,
In this heartless world!
She didn’t like for her child,
To writhing die helpless!
She killed herself!
It is not strange for to kill the one you love!
All-soul-loving-chaste, Ahimsa Murthy, World’s Righteous Gandhi,
He himself has advocated to kill the calf,
That is writhing with pain of disease!
Since, he couldn’t withstand its suffering!
Kalyani too followed the same principle!
How is that a crime?
வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ வழியில்லை! தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பில்லை! என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் கோடீஸ்வரன் வீட்டு பள்ளியறையிலே ஒரு நாள், மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள், இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை! இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?
veLinaattilirundhu thirumbiya
oru thamizhanukku vaazha vazhiyillai!
thamizhnaattilae piRandha oru peNNukku
vaazhvadhaRku paadhugaappillai!
en thangai mattum konjam vittuk koduthirundhaal
koadeesvaran veettu paLLiyaRaiyilae oru naaL,
maanathai vilai kooRiyirundhaal
maaLigai vaasiyin madiyilae oru naaL,
ippadi oattiyirukkalaam naatkaLai!
idhaithaanaa indha needhimanRam virumbugiRadhu?
For a tamizhan, returned from foreign,
Has no means to live!
For a woman, born in tamilnadu,
There is no protection to live!
If my sister had even compromised a little,
In the beds of a crorepati, for a day,
If she had said a price for her chastity,
In the laps of the wealthy, for another day,
She could have lived her daily life as such!
Is this what this court desires?
பகட்டு என் தங்கையை துரத்தியது! பயந்து ஓடினாள்! பணம் என் தங்கையை துரத்தியது! மீண்டும் ஓடினாள்! பக்தி என் தங்கையை பயமுறுத்தியது! ஓடினாள்! ஓடினாள்! வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்!
pagattu en thangaiyai thurathiyadhu!
payandhu oadinaaL!
paNam en thangaiyai thurathiyadhu!
meeNdum oadinaaL!
pakthi en thangaiyai payamuRuthiyadhu!
oadinaaL! oadinaaL!
vaazhkkaiyin oarathiRkae oadinaaL!
Posh chased my sister!
She ran in fear!
Money chased my sister!
She ran again!
Devotion frightened my sister!
She ran! Ran!
She ran to the brim of life itself!
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்! வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்! இந்த சட்டத்தை தீட்டுவோர்! செய்தார்களா? வாழ விட்டார்களா என் கல்யாணியை?
andha oattathai thaduthirukka vaeNdum!
vaattathai poakkiyirukka vaeNdum!
indha chattathai theettuvoar!
cheydhaargaLaa?
vaazha vittaargaLaa en kalyaaNiyai?
Her run should have been stopped!
Her poverty should have been averted!
By these law providers!
Did they do it?
Did they leave my Kalyani to live?
குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகின்றார்! இல்லை! யார் வழக்கிற்கும் இல்லை! அதுவும் என் வழக்கு தான்! என் தங்கையின் வழக்கு! தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதிலே என்ன தவறு?
kutRavaaLi yaar vazhakkiRkoa vakkeelaaga maaRuginRaar!
illai! yaar vazhakkiRkum illai!
adhuvum en vazhakku thaan!
en thangaiyin vazhakku!
thangaiyin maanathai azhikka
eNNiya maabaavikku puthi pugatta
aNNan oaduvadhilae enna thavaRu?
The accused seems to be arguing for someone else’s case!
No! Not for anyone else’s!
That case is too mine!
My Sister’s case!
What’s wrong in me, his brother,
running after the culprit,
who wanted to destroy my sister’s chastity?
கல்யாணி தற்கொலை செய்து கொள்ள முயன்றது ஒரு குற்றம்! குழந்தையை கொன்றது ஒரு குற்றம்! நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம்! இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார்? யார் காரணம்?
kalyaaNi thaRkolai cheydhu koLLa muyanRadhu oru kutRam!
kuzhandhaiyai konRadhu oru kutRam!
naan poosaariyai thaakkiyadhu oru kutRam!
ithanai kutRangaLukkum kaaraNam yaar?
yaar? yaar kaaraNam?
Kalyani’s attempt to commit suicide is a crime!
Killing her child is a crime!
My attack on priest is a crime!
Who’s responsible for all these crimes?
Who is? Who is responsible?
கல்யாணியை கஞ்சிக்கு வழியில்லாதவளாக அலைய விட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?
kalyaaNiyai kanjikku vazhiyillaadhavaLaaga
alaiya vittadhu yaar kutRam?
vidhiyin kutRamaa?
alladhu vidhiyaich cholli
vayiRu vaLarkkum veeNargaLin kutRamaa?
Who’s crime is it for letting
Kalyani wander without even food?
Crime of Fate?
Or is it the crime of rogues,
Who feast upon the name of fate?
பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைத்த வஞ்சகர்களின் குற்றமா?
paNam paRikkum koLLai koottathai
vaLaravittadhu yaar kutRam?
panjathin kutRamaa?
alladhu panjathai manjathiRku
varavazhaitha vanjagargaLin kutRamaa?
Who’s crime is it for letting
the growth of money-laundering thieves?
Crime of Famine?
Or is it the crime of rascals,
Who converted poverty to prostitution?
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரைச்சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா?
kadavuL peyaraal kaamaleelai nadathum poali poosaarigaLai
naattilae nadamaada vittadhu yaar kutRam?
kadavuLin kutRamaa?
alladhu kadavuL peyaraicholli
kaalatchaebam nadathum kayavargaL kutRamaa?
Who’s crime is it for letting
Fake priests to wander around, playing sin in the name of God?
Crime of God?
Or is it the crime of Morons
Preaching in the name of God?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை! இது தான் எங்கள் வாழ்க்கை ஏட்டின் எந்த பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்!
indha kutRangaL kaLaiyappadum varai
kuNasaegarangaLum kalyaaNigaLum
kuRaiyappoavadhillai!
idhu thaan engaL vaazhkkai aettin
endha pakkam purattinaalum
kaaNappadum paadam, paguthaRivu,
payanuLLa arasiyal thathuvam!
Till these crimes are cured,
Gunaskarans and Kalyanis
Are never going to stop!
This is the lesson, Rational,
Practical Political Philosophy,
That can be found in every page
In the books of our lives!
[Parasakthi – Climar Court Scene Monologue]