[Iyarkai] Kaadhal Vandhaal

Movie: Iyarkai
Poet: Vairamuthu
Singer: Tippu, Manikka Vinayagam
Music Director: Vidyasagar
Song sequence: (1)-(2)-(3)-(4)-(5)-(6)-(7)-(2)-(8)-(2)

(1) Babe! Tell me you love me
 I hope I hear it while I'm alive

அன்பே ! சொல் ! என்னை காதலிக்கிறாய் என்று !
நான் உயிரோடிருக்கும் போதே அதை கேட்க ஏங்குகிறேன்  !

(2) காதல் வந்தால் சொல்லி அனுப்பு
 உயிரோடிருந்தால் வருகிறேன்
 (3) என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
 கரையில் கரைந்து கிடக்கிறேன்

kaadhal vandhdhaal solli anuppu
uyiroadirundhdhaal varugiRaen
en kaNNeer vazhiyae uyirum vazhiya
karaiyil karaindhdhu kidakkiRaen

If you ever fall in love! Let me know!
If I am still alive, I will come back!
As my soul erodes with ever tear drop,
I lay here at the shore dissolving into the waves,

(4) சுட்ட மண்ணிலே மீனாக
 மனம் வெட்டவெளியிலே வாடுதடி
 கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
 கடல் நீர் மட்டம் கூடுதடி

sutta maNNilae meenaaga
manam vettaveLiyilae vaadudhadi
kaNNeer kalandhdhu kaNNeer kalandhdhu
kadal neer mattam koodudhadi

Like the fish on the scorching land,
This heart is wilting away in vaccum!
With every tear drop blending into the sea,
The sea level keeps rising!

(5) உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
 காதலிக்கும் முன்பு
 இந்த உலகே எந்தன் சொந்தமானதே
 காதல் வந்த பின்பு

uyiraith thavira sondhdham illaiyae
kaadhalikkum munpu
indhdha ulagae endhdhan sondhdhamaanadhae
kaadhal vandhdha pinpu

Before falling in love,
Nothing else was my own except my soul,
After falling in love,
This whole world seems like my own!

(6) Baby! Tell me you love me
 It's never late
 Dont hesitate

அன்பே ! சொல் ! என்னை காதலிக்கிறாய் என்று !
எ(இ )ந்நேரமும் தாமதமில்லை!
தயங்காதே

(7) சாவை அழைத்து கடிதம் போட்டேன்
 காதலிக்கும் முன்பு
 ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
 காதல் வந்த பின்பு
 உன்னால் என் கடலலை
 உறங்கவே இல்லை
 உன்னால் என் நிலவுக்கு
 உடல் நலமில்லை
 கடல் துயில் கொள்வதும்
 நிலா குணம் கொள்வதும்
 நான் உயிர் வாழ்வதும்
 உன் சொல்லில் உள்ளதடி
 உன் இறுக்கம்தான்
 என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி

saavai azhaithu kadidham poattaen
kaadhalikkum munpu
oru saavai pudhaikka sakthi kaetkiRaen
kaadhal vandhdha pinpu
unnaal en kadalalai
uRangavae illai
unnaal en nilavukku
udal nalamillai
kadal thuyil koLvadhum
nilaa kuNam koLvadhum
naan uyir vaazhvadhum
un sollil uLLadhadi
un iRukkamdhaan
ennuyirai kolludhadi kolludhadi

Before I fell in love,
I wrote letters inviting death,
Now, after falling in love,
I ask for the strength to bury death!
Because of you,
The waves in my heart are unabating,
Because of you,
My moon is feeling unwell,
for the sea to rest,
for the moon to recover,
for me to live,
your words alone are needed,
your stringency (in love) alone,
is killing my soul!

(8) பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு
 நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னைக் கண்ட பின்பு
 அன்னை தந்தை கண்டதில்லை நன் கண் திறந்த பின்பு
 என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு
 பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
 அதற்க்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
 நான் கரையாவதும்
 இல்லை நுரையாவதும்
 வளர் பிறையாவதும்
 உன் சொல்லில் உள்ளதடி
 உன் இறுக்கம்தான்
 என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி

piRandhdha maNNai aLLi thindRaen unnai kaaNum munpu
nee nadandhdha maNNai aLLith thindRaen unnaik kaNda pinpu
annai thandhdhai kaNdadhillai nan kaN thiRandhdha pinpu
en athanai uRavum motham kaNdaen unnai kaNda pinpu
peNNae en payaNamoa thodangavae illai
adhaRkkuL adhu mudivadhaa viLangavae illai
naan karaiyaavadhum
illai nuraiyaavadhum
vaLar piRaiyaavadhum
un sollil uLLadhadi
un iRukkamdhaan
ennuyirai kolludhadi kolludhadi

I worshipped my birthplace before I saw you,
I worship the land you walked after I saw you,
I have not seen my parents since I opened my eyes,
I see all my relations together now after seeing you,
Oh Woman! My expedition has not even started!
How then can it end so soon? I do not understand?
Me turning into the shore,
or into the spume,
or into the crescent moon,
depends on your words alone,
Your stringency (in love),
is killing my soul!

[Iyarkai] Kaadhal Vandhaal lyrics and translation

people found this article helpful. What about you?

Please let us know what you think of our translation